மகனுக்காக தாய் செய்த அந்த ஒரு செயல்! கடைசியில் கொடூர மகன் தாய்க்கு செய்த கொடூரம்! உள்ளே சின்ன பாப்பா வேற... தருமபுரியில் நடந்த பயங்கரம்..!!!



dharmapuri-son-kills-mother-after-bail

தருமபுரி மாவட்டம் பழைய இண்டூரில் குடிப்பழக்கம் குறித்து அறிவுரை கூறிய தாயை, 19 வயது மகனே இரும்பு ராடால் தாக்கிக் கொலை செய்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர், வீட்டில் தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ரூ.40 ஆயிரம் செலவு செய்து மகனை ஜாமீனில் எடுத்த தாய்

பழைய இண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னபாப்பா (42). இவரது மகன் தேவராஜ் (19), கூலித் தொழில் செய்து வந்தார். அவருக்குத் தீவிரமான மதுப்பழக்கம் இருந்தத நிலையில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இண்டூர் பேருந்து நிலையத்தில் மதுபோதையில் காவலரின் தொப்பியை அணிந்து ரகளையில் ஈடுபட்டதால், இண்டூர் போலீசார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: 20 நாட்கள் ஆகிட்டு... செஞ்சி சிறுமி மயமான இரவில் விடிய விடிய எரிந்த செங்கல் சூளை! நடந்தது என்ன..? சிக்கிய 600 செல்போன் எண்கள்! விசாரணையில் ரூட்டை மாற்றிய சி.பி.சி.ஐ.டி..!!!

மகனை சிறையிலிருந்து வெளியே கொண்டுவர வேண்டும் என்ற எண்ணத்தில் சின்னபாப்பா சுமார் ரூ.40 ஆயிரம் செலவு செய்து, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜாமீனில் அழைத்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்ததும் மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு குடிப்பழக்கத்தை கைவிடுமாறு அறிவுரை கூறியுள்ளார். ஆனால், தாய் தன்னைக் கண்டிப்பதை ஏற்காத தேவராஜ் ஆத்திரமடைந்துள்ளார்.

இரும்பு ராடால் தாயைத் தாக்கிய மகன்

வாக்குவாதம் முற்றிய நிலையில், வீட்டிலிருந்த இரும்பு ராடால் சின்னபாப்பாவை தேவராஜ் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டுக்கு ஓடிவந்தனர். கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததால், சாவித் துவாரம் வழியாகப் பார்த்தபோது தேவராஜின் கையில் ரத்தக்கறையுடன் இரும்பு ராடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இண்டூர் போலீசார், தேவராஜிடம் பேசி கதவைத் திறக்கச் செய்தனர். பின்னர் அவரைக் கைது செய்தனர். வீட்டுக்குள் சின்னபாப்பா உயிரிழந்து கிடந்தார்.

கஞ்சா போதை இல்லை; போலீசார் விளக்கம்

தேவராஜ் கஞ்சா போதையில் தாயைக் கொலை செய்ததாகத் தகவல்கள் பரவின. ஆனால், இதனை போலீசார் மறுத்துள்ளனர். மதுப்பழக்கத்துக்கு அடிமையான தேவராஜ், தன்னை யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற ஆத்திரம் மற்றும் ஈகோ காரணமாகவே தாயைக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சின்னபாப்பாவின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட தேவராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் மகனை வெளியே கொண்டு வந்த தாயையே அவர் கொலை செய்த சம்பவம் பழைய இண்டூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: செஞ்சி சிறுமி வழக்கில் சிக்கிய 600 போன் எண்கள்..! சிபிசிஐடியின் நள்ளிரவு டிஜிட்டல் பிளான்... உரையாடல்கள் கண்காணிப்பு...!!!