விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
நள்ளிரவில் பெண்ணை கடத்தி பலாத்கார முயற்சி.. காரில் இருந்து குதித்து காட்டிற்குள் ஓடிய இளம்பெண்..!
தனியாக சுற்றுலா சென்ற பெண்ணை கார் ஓட்டுநர் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் வசித்து வரும் 31 வயதுடைய பெண்மணி ஒருவர் கடந்த மார்ச் 5ஆம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதிக்கு தனியாக சுற்றுலா சென்றுள்ளார். இவர் நள்ளிரவு சுமார் 11 மணியளவில் காத்கோடமில் என்ற பகுதியில் இருந்து நைனிடால் செல்வதற்காக வாடகை டாக்ஸி எடுத்துள்ளார். இந்த காரை ஹல்த்வானி பகுதியைச் சேர்ந்த தீபக்சிங் போரா என்ற 39 வயது ஆண் ஒட்டி வந்துள்ளார்.
ஓட்டுனரின் வக்கிர புத்தி:
கடந்த 6ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் நைனிடால் பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பகுதிக்கு கார் சென்ற நிலையில், ஓட்டுநர் திடீரென ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு காரை திருப்பியுள்ளார். ஓட்டுனரின் செயலால் சந்தேகமடைந்த பெண்மணி சத்தமிடவே, ஓட்டுநர் அவரை தாக்கி செல்போனை பறித்துள்ளார்.
இதையும் படிங்க: 9 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 10, 12 வயது சிறார்கள்.. வாயைப்பொத்தி அரங்கேறிய கொடூரம்.!

காட்டில் மறைந்து உயிர் தப்பிய பெண்:
மேலும் பாலியல் பலாத்காரம் செய்யவும் முயற்சி செய்துள்ளார். இதனால் ஓட்டுனரிடம் இருந்து தப்பிக்க முயன்ற பெண் உடனடியாக காரில் இருந்து குதித்து காட்டிற்குள் ஓடியுள்ளார். காயங்களுடன் தப்பித்த பெண்மணி இரவு முழுவதும் மரங்கள் நிறைந்த இருட்டிற்குள் மறைந்திருந்து உயிர் தப்பியுள்ளார்.
குற்றவாளி கைது:
இதனை தொடர்ந்து காலை அருகில் இருக்கும் கிராமத்திற்கு சென்ற பெண்ணை கிராமத்தினர் பெண்கள் காவல்நிலையத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர். பின் அதிகாரிகள் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்து அவரது காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நெஞ்செல்லாம் பதறுதே.. உடலில் காயங்கள்., ரத்தக்கறையுடன் வீடு திரும்பிய 7 வயது சிறுமி.. தின்பண்டம் ஆசை காட்டி இளைஞர் செய்த கொடூரம்.!