9 வயது சிறுமியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 10, 12 வயது சிறார்கள்.. வாயைப்பொத்தி அரங்கேறிய கொடூரம்.!



UP Horror: 9-Year-Old Girl Assaulted, Two Minor Boys Arrested

வயல்வெளிக்கு சென்ற 9 வயது சிறுமியை பழம் தருவதாக அழைத்துச் சென்று இரண்டு சிறார்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டம் சிகந்தரா கிராமத்தில் 9 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனிடையே சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் 3 மணி அளவில் கிராமத்துக்கு அருகில் இருக்கும் வயல்வெளிக்கு சென்ற நிலையில் கால்நடைகளுக்கு தீவனம் எடுத்து வர முயற்சித்துள்ளார். 

தப்பியோட முயன்ற சிறுமி:

அப்போது சிறுமியை இடைமறித்த அதே கிராமத்தை சேர்ந்த 10 மற்றும் 12 வயதுடைய சிறார்கள் சிறுமிக்கு பழங்கள் தருவதாக கூறி கோதுமை வயலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தனியாக இருந்த சிறுமியை சிறார்கள் வன்கொடுமை செய்ய முயற்சிக்கவே கதறிய சிறுமி அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்.

இதையும் படிங்க: Thoothukudi News: 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. சிலம்பம் ஆசிரியர் போக்ஸோவில் கைது.. பெற்றோர்களே கண்காணிங்க..!

Uttar pradesh

வாயைப்பொத்தி பயங்கரம்:

இந்த நிலையில் சிறுமியை பிடித்த சிறார்கள் அவரின் வாயை பொத்தி வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன்பின் தப்பிவந்த சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

சிறார்கள் கைது:

சிறுமி கூறியதை கேட்டு பதறிய தாய் உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, அதிகாரிகள் புகாரின் பேரில் விசாரணை நடத்தி குற்றவாளிகளான இருவரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம் வயதுடைய சிறார்கள் இவ்வாறான குற்றத்தில் ஈடுபடுவது கவலையை அளிப்பதாக சமூக ஆர்வலர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!