குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார் கண்ட அதிர்ச்சி! சகோதரர்கள் செய்ததாக நாடகமாடிய தாய்... நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!!
குவாத்தமாலாவில் கைகள் கட்டப்பட்ட நிலையில், ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனை அண்டை வீட்டார் மீட்டுள்ளனர். வீட்டின் முற்றத்தில் வெறுங்காலுடன் அழுது கொண்டிருந்த குழந்தையைப் பார்த்த அவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் அளித்தனர். குழந்தையைப் பராமரிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட தாய்க்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த அண்டை வீட்டார்
குவாத்தமாலாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் சிறுவன் நீண்ட நேரமாக இடைவிடாமல் அழும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து வெளியே வந்த அண்டை வீட்டார், ஒரு வீட்டின் முற்றத்தில் சிறுவன் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். வெறுங்காலுடன், ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் மெலிந்த நிலையில் இருந்த குழந்தை தொடர்ந்து அழுது கொண்டிருந்தது.
இதையும் படிங்க: 3 வயது குழந்தையை சீரழித்து கழுத்தை நெரித்து கொன்ற கொடூரம்..! குழந்தைதையை தேடுவது போல் நாடகமாடிய கொடூரன்! குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!!
உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் சிறுவனின் கட்டுகளை அவிழ்த்து, உணவும் தண்ணீரும் கொடுத்து அவனை மீட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், குழந்தையின் தாய் மோரா (25), விளையாடும்போது அவனது சகோதரர்கள்தான் இப்படிச் செய்ததாகக் கூறியுள்ளார்.
தாய்க்கு 5 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறை
ஆனால், விசாரணையில் தாயின் விளக்கம் பொய் எனத் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, மோராவுக்கு 5 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் விவாதம்
முன்னதாகவும் குழந்தைகளைச் சரியாகப் பராமரிக்கவில்லை என மோரா மீது பலமுறை புகார்கள் எழுந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படியிருந்தும் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதே குழந்தை இந்த நிலைக்கு ஆளாகக் காரணம் என சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புகார்களை அதிகாரிகள் ஆரம்பத்திலேயே தீவிரமாகக் கவனிக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
سمع الجيران في غواتيمالا صوت بكاء صبي لا يتوقف، وعند تفحص المكان وجوده في فناء احد المنازل حافي القدمين ويداه مربوطتان
— Saif (@diol2n) November 2, 2026
ابلغو الشرطة وتم انقاذه واكتشفوا انه يعاني من سوء تغذية
ولم ينتهي الامر هنا وكانت الصدمة الحقيقة:
خرجت والدته مورا (25 عام) وانكرت انها من قامت بذلك وادعت…
இதையும் படிங்க: அப்பா... என்னை கூட்டிட்டு போங்க.! நானும் வரேன்... கதறி அழும் 3 வயது குழந்தை...! நகர முடியாமல் தவிக்கும் தந்தை... கண்கலங்க வைக்கும் காட்சி...!!!