நீதி வேண்டும்... பாலியல் தாக்குதலால் துடிதுடித்து இறந்த 10 வயது சிறுமி! குற்றவாளிகள் தண்டனையின்றி திரிகிறார்கள்... பகீர் வீடியோ..!!!
பாகிஸ்தானின் சிந்த் மாநிலத்தில் 10 வயது சிறுமி பாத்திமா ஃபரூக் உயிரிழந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு இன்னும் தண்டனை கிடைக்கவில்லை எனக் கூறி மீண்டும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. கைர்பூர் மாவட்டம் ராணிபூரில் உள்ள ஒரு ஹவேலியில் வேலை செய்து வந்த சிறுமி, கடந்த காலத்தில் கடுமையான சித்திரவதைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். இந்த வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஹவேலியில் வேலை செய்த சிறுமி உயிரிழப்பு
ராணிபூர் பகுதியைச் சேர்ந்த பீர் அசாத் ஷா ஜிலானியின் வீட்டில் 10 வயது பாத்திமா ஃபரூக் வேலை செய்து வந்தார். அப்போது சிறுமி கடுமையான உடல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கு தொடர்பான மருத்துவ அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கும் உடல் தாக்குதலுக்கும் ஆளானதற்கான அறிகுறிகள் இருந்தன. இதையடுத்து, சிறுமியின் மரணம் தொடர்பாக விசாரணை தீவிரமடைந்தது.
அசாத் ஷா உள்ளிட்டோர் கைது
இந்த வழக்கில் அசாத் ஷா, ஹீனா ஷா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அரசியல் செல்வாக்கு மற்றும் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டனையின்றி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
நீதி கேட்டு மீண்டும் எழும் எதிர்ப்புக் குரல்கள்
சிறுமியின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், வழக்கில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு வருகின்றனர். உரிமைக் குழுக்களும் இந்த வழக்கை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளன.
சிறுமி உயிரிழந்த வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் தற்போதைய நிலை குறித்த முழுமையான விவரங்கள் தெளிவாக இல்லாத நிலையில், நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை பாகிஸ்தானில் மீண்டும் விவாதமாகியுள்ளது.
رانی پور کی حویلی میں ظالم سید نے ایک معصوم سندھی ملازمہ کے ساتھ زیادتی کی، پھر خود جا کر بستر پر سکون سے سو گیا، جبکہ وہ معصوم لڑکی ساتھ ہی زمین پر تڑپتے تڑپتے دم توڑ گئی۔ آج بھی وہ سید اور اس کی ظالم بیوی آزاد ہیں اور پُرسکون زندگی گزار رہے ہیں، انہیں کوئی سزا نہیں ملی، کیونکہ… pic.twitter.com/svtLPcxZpH
— Comrade Rukhsa halepoto (@Rukhsnahalepoto) November 2, 2026