11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற பயங்கரம்.. 24 வயது இளைஞரின் குலைநடுங்க வைக்கும் செயல்.!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர், வழக்கில் சிக்காமல் இருக்க கோடரியால் வெட்டிக் கொலை செய்த பயங்கரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாராயண ஊர் மாவட்டம் சோன்பூர் பகுதியில் 11 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த டிசம்பர் 31ம் தேதி மாயமாக இருந்தார். இதனால் சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
சிறுமி வன்கொடுமை & வெட்டிக்கொலை:
இந்த நிலையில், மறுநாள் காலையில் அங்குள்ள வேறொரு கிராமத்திற்கு அருகே இருக்கும் வயல்வெளியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியான நிலையில், ஆதாரங்களை மறைக்க குற்றவாளி கோடரியால் சிறுமியை வெட்டிக்கொடுர கொலை செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு... இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது.!!

24 வயது இளைஞர் கொலை:
இதனையடுத்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிய வந்த நிலையில், அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து 24 வயதுடைய இளைஞரை கைது செய்தனர். சிறுமியின் குடும்பத்திற்கு நன்கு தெரிந்த இளைஞர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து, வழக்கில் சிக்காமல் இருக்க கொலை செய்தது தெரியவந்தது.