நள்ளிரவில் ஷாக் கொடுத்த மத்திய அரசு.! அதிகாலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த நிர்மலா சீதாராமன்.!

நள்ளிரவில் ஷாக் கொடுத்த மத்திய அரசு.! அதிகாலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த நிர்மலா சீதாராமன்.!



Withdrawal of interest reduction

வங்கி சேமிப்பு, வைப்புத் தொகை திட்டங்கள், பிபிஎப் (PPF), KVB, பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைப்பதாக நேற்று (31/03/2021) நிதியமைச்சகம் அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பை வாபஸ் பெறுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் 7.1%ல் இருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருந்தது.


அதேபோல் ஒராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் அறிவித்தனர்.

இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்தியாவின் சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த விகிதங்களில் தொடர்ந்து இருக்கும், அதாவது மார்ச் 2021 வரை நிலவும் விகிதங்கள். மேற்பார்வை மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் திரும்பப் பெறப்படும் என தெரிவித்துள்ளார்.