இந்தியா டெக்னாலஜி

ஐடி ஊழியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தகவலை கூறிய பிரபல நிறுவனம்..! மகிழ்ச்சியில் ஊழியர்கள்.!

Summary:

Wipro said no lay off for corona

கொரோனாவை காரணம் காட்டி யாரையும் பணிநீக்கம் செய்யவும் இல்லை, இனி செய்யபோவதும் இல்லை என பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பலர் வேலை இழந்து தவித்துவருகின்றனர். பல்வேறு நிறுவனங்கள் பொருளாதார நெருக்கடி காரணமாக பல தொழிலார்களை வேலையைவிட்டு நீக்குவது, ஊதியத்தை குறைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது.

குறிப்பாக ஐடி நிறுவனத்தில் வேலை புரிபவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஐடி நிறுவனங்கள் பல வெளியில் தெரியாமல் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இந்நிலையில் பிரபல ஐடி நிறுவனமான விப்ரோ கொரோனாவை காரணம் காட்டி பணிநீக்கம் செய்யப்போவது இல்லை என தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள விப்ரோ நிறுவனத்தின் தலைவர் பிரேம்ஜி, கொரோனவை காரணம் காட்டி  எந்தவொரு ஊழியரையும் பணிநீக்கம் செய்யப்போவது இல்லை. வருங்காலத்திலும் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் இல்லை என கூறியுள்ளார். இந்த அறிவிப்பால் விப்ரோ நிறுவன ஊழியர்கள் சற்று மகிழ்ச்சியில் உள்ளனர் 


Advertisement