இந்தியா

முப்படை தளபதியுடன் சேர்ந்து உயிரிழந்த அதிகாரி! 2 குழந்தைகளுடன் தவித்த மனைவிக்கு கிடைத்த ஆறுதல்.!

Summary:

முப்படை தளபதியுடன் சேர்ந்து உயிரிழந்த அதிகாரி! 2 குழந்தைகளுடன் தவித்த மனைவிக்கு கிடைத்த ஆறுதல்.!


இந்திய பாதுகாப்புப் படைகளின் தலைமை தளபதியாக இருந்த ஜெனரல் பிபின் ராவத், உள்ளிட்ட 14 பேர் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் திகதி விபத்தில் சிக்கி வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். 

பிபின் ராவத்துடன் உயிரிழந்தவர்களில் ஒருவர் தான் கேரளாவை சேர்ந்த ஜூனியர் வாரண்ட் அதிகாரி பிரதீப். ஹெலிகாப்டர் விபத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரி பிரதீப்  உயிரிழந்த நிலையில் அவர் மனைவி அரசு பணியில் சேர்ந்துள்ளார். கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் தவித்து வந்த பிரதீப்பின் மனைவி ஸ்ரீலட்சுமிக்கு அரசு பணி கிடைத்துள்ளது அவருக்கு பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

பிரதீப்பின் மனைவி ஸ்ரீலட்சுமிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்ற முடிவை ஏற்கனவே நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி எடுத்திருந்தார். இதனையடுத்து நேற்று தாலுகா அலுவலகத்துக்கு தனது இரண்டு குழந்தைகளுடன் வந்த ஸ்ரீலட்சுமி கிளார்க் பணியில் சேர்ந்தார். 


Advertisement