இந்தியா

நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த கணவனின் பிறப்புறுப்பை துண்டித்த மனைவி.! அதிர்ச்சி காரணம்.!

Summary:

உத்தரபிரதேச மாநிலம் ஷிகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வகீல் அகமது. 57 வயது நிரம்பிய இவருக்கு

உத்தரபிரதேச மாநிலம் ஷிகார்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வகீல் அகமது. 57 வயது நிரம்பிய இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவி பெயர் ஹாஜ்ரா. இந்தநிலையில், கடந்த சில நாட்களாக வகீல் அகமது  மூன்றாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி வந்துள்ளார். 

வகீல் அகமது  மூன்றாவது திருமணம் செய்து கொள்வதற்கு ஹாஜ்ரா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதன்காரணமாக இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த வகீல் அகமதுவின் பிறப்புறுப்பை ஆயுதத்தை கொண்டு துண்டித்துள்ளார் ஹாஜ்ரா. இதனால் துடிதுடித்த வகீல் அகமது சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்தநிலையில் தனது கணவர் இறந்துவிட்டார் என கூறி, ஹாஜ்ரா தனது உறவினர்களின் உதவியுடன் இறுதி சடங்குகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வக்கீல் அகமதுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், தனது கணவனின் பிறப்புறுப்பை துண்டித்து கொலை செய்ததை ஹாஜ்ரா ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஹாஜ்ராவை போலீசார் கைது செய்தனர்.


Advertisement