இந்தியா லைப் ஸ்டைல்

என் கணவர் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்..! புகார் கொடுத்த மனைவி..! நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு..!

Summary:

Wife filed rape case against to husband

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், தனது கணவர் திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டு சிறை சென்றவர் என்பது எங்கள் திருமணத்திற்கு பிறகே எனக்கு தெரியவந்தது.

இதனால் அவருடன் சேர்ந்து வாழ எனக்கு விருப்பமில்லை எனவும் இதனால் நான் டெல்லிக்கு சென்று அங்கு தங்கியிருக்கும்போது எனது கணவர் தன்னிடம் வந்து நான் திருந்திவிட்டதாகவும், இனி அதுபோன்ற காரியங்களில் ஈடுபடமாட்டேன் என கூறியதால், அதை நம்பி அவருடன் குடும்பம் நடத்தியதாகவும் கூறியுள்ளார்.

மேலும், வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து எனது கணவர் வீட்டில் இருந்த 2 லட்சம் பணத்தை திருடிவிட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் தன்னை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதாக அந்த பெண் புகாரில் கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி பலாத்காரம் நடந்ததாக அப்பெண் போலீஸில் புகார் அளித்துள்ளார். புகார் அளித்த பெண்ணுக்கு கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி சம்மந்தப்பட்ட நபருடன் திருமணம் நடந்துள்ளது.

எனவே, அந்த பெண் குற்றம்சாட்டப்பட்ட தேதியில் அந்த நபர் இந்த பெண்ணின் கணவர் என்ற அந்தஸ்த்துடன்தான் இருந்துள்ளார். இதனால் இதற்கு பலாத்கார பிரிவின் கீழ் தண்டனை கொடுக்க முடியாது என கூறி கணவரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Advertisement