இந்தியா

வெளிநாட்டில் பணிபுரிந்த கணவன்! வீட்டில் தூங்க சென்ற மனைவி செய்த காரியம்! அதிர்ச்சியில் மூழ்கிய மாமியார்!

Summary:

Wife commits suicide for fearing husband affected corono

கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் பிஜுகுமார். இவர் சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பிரேமா கோவிந்த். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர்களுக்கு இருகுழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு சாப்பிட்டுவிட்டு, நன்கு பேசிக்கொண்டு இருந்த பிரேமா தனது குழந்தைகளுடன் தூங்கச் சென்றுள்ளார்.

பின்னர் மறுநாள் அதிகாலை பிரேமாவின் மாமியார் சமையலறைக்கு சென்று பார்த்தபோது அங்கு பிரேமா தீயில் கருகி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரேமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணை மேற்கொண்டதில், சவுதி அரேபியாவில் பணிபுரிந்துவரும் பிஜுகுமாரின் அறையில் தங்கியிருந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிஜுகுமாரும் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். இதனை அறிந்த பிரேமா மிகுந்த மனவேதனை அடைந்துள்ளார். அனைவரிடமும் கூறி புலம்பிக்கொண்டு இருந்துள்ளார். 

மேலும் இதனாலேயே மனநலப் பிரச்சினைக்கும் உள்ளாகியுள்ளார். இந்நிலையில் கவலையிலேயே பிரேமா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் அங்கு  பிரேமா எழுதிய கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில் என்னால் மனநிலை பிரச்சனையில் இருந்து மீள முடியவில்லை. மேலும் நான் எனது கணவருக்கு தொல்லையாக இருக்க விரும்பவில்லை என எழுதப்பட்டிருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement