வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய வசதி; பயனடைவோர் நீங்களாகவும் இருக்கலாம்.!

வாட்ஸ் ஆப்பில் அறிமுகமாகும் புதிய வசதி; பயனடைவோர் நீங்களாகவும் இருக்கலாம்.!



watsapp indruduced new metod - status add

இன்று உலகளவில் மிகப்பெரிய தகவல் தொடர்பு செயலியாக வாட்ஸ் ஆப் இருந்து வருகிறது. இதுவரை வாட்ஸ் ஆப்பில் எந்த விளம்பரங்களும் ஒளிப்பரப்பியது இல்லை. ஆனால் விரைவில் இந்த செயலியில் உள்ள ஸ்டேட்டஸ் பகுதியில் விளம்பரங்கள் பதிவிடப்படும் என வாட்ஸ்-ஆப் நிறுவனம் அறிவித்தது. 

4 வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்-ஆப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் 19 பில்லியன் டாலருக்கு வாங்கியது. ஆனால் இதுவரை எந்த வருமானமும் இன்றி இலவசமாகவே சேவை செய்து வருகிறது. இந்நிலையில் பேஸ்புக் முதன்மை செயல் அலுவலர் மார்க் சுக்கர்பெர்க் வாட்ஸ்-ஆப் மூலம் வருமானம் பெற வேண்டும் என முடிவு செய்துள்ளார்.



 

இதுகுறித்து வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டுள்ள தகவலில் "வாட்ஸ்-அப் செயலியின் ஸ்டேடஸ் பகுதியில் நாங்கள் விளம்பரத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம். இந்த முடிவானது எங்கள் நிறுவனத்திற்கு முதன்மை வருமானத்தையும் மற்ற நிறுவனங்கள் அவர்களுடைய விளம்பரங்களை வாட்ஸ் அப்பில் பதிவிட வாய்ப்பையும் அளிக்கும்"  என தெரிவித்தது.

இந்நிலையில், நெதர்லாந்தில் நடந்த பேஸ்புக் மார்க்கெட்டிங் மாநாட்டில் இந்த அப்டேட் வரவிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு 2020 முதல் நடைமுறைக்கு  வர உள்ளது. பேஸ்புக், யூடியூபில், டிவிட்டர் போன்றவற்றிலும் வீடியோவுக்கு மத்தியிலும் பதிவுகளுக்கு இடையிலும் விளம்பரங்கள் வருவது போல் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்களுக்கு ஊடாகவும் இனி விளம்பரங்கள் தோன்ற உள்ளன. 

watsup