காவாலா பாட்டு எல்லாம் ஓரம் போ!! வந்துட்டா மோனிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் பாடல்.
களமிறங்குகிறதா சிபிஐ..? விழுப்புரம் சிறுமி கொலையை சிபிஐ விசாரிக்க நீதிமாற்றத்தில் புது மனு..!

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ கொடூரமாக கொல்லப்பட்ட நிலையில், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று விழுப்புரம் சிறுமி கொலை வழக்கு. வீட்டில் இருந்த சிறுமையை வாயில் துணி வைத்து, கைகால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சென்னை ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர், சென்னை உயர் நீதிமாற்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், கொலையாளிகள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக காவல்துறை விசாரணை செய்தால் நியாயம் கிடைக்காது எனவும், உடனே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிடவேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார் . இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.