தேசியக்கொடி ஏற்றி தொண்டர்களுக்கு காட்சியளித்த விஜயகாந்த்.. உற்சாகத்தில் கரகோஷத்துடன் ஆட்பறிப்பு..!!

தேசியக்கொடி ஏற்றி தொண்டர்களுக்கு காட்சியளித்த விஜயகாந்த்.. உற்சாகத்தில் கரகோஷத்துடன் ஆட்பறிப்பு..!!


Vijayakanth Independence Day Flag Salute

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிய நிலையில், இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடி வருகிறது. இதனை சிறப்பாக கொண்டாட இந்தியர்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப சிறிய கம்பு முதல் பெரிய அளவிலான கொடைக்கம்பம் வரை மக்கள் தேசியக்கொடிகளை ஏற்றி வருகின்றனர். 

இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது தேமுதிக தலைமை கழகத்தில் நிறுவன தலைவரும், பொதுச்செயலாளமான கேப்டன் விஜயகாந்த் இன்று 8:30 மணியளவில் தேசியக்கொடியை ஏற்ற இருப்பதாக ட்வீட் செய்தார்.

மேலும் இதில் ஒன்றிய, மாவட்ட, நகர, பேரூர், கழக, வட்டம், பகுதி, மகளிர் அணி, சார்பணி, தொழிற்சங்க மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நமது நாட்டுபற்றை பறைசாற்றும் வகையில் கொண்டாட வேண்டும் என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை தலைமை கழகத்தில் தேசியக்கொடி ஏற்றிய விஜயகாந்த் தனது தொண்டர்களை கண்டு கையசைத்துவிட்டு சென்றார். அத்துடன் தொண்டர்கள், "தலைவா உன்னை கண்டு எத்தனை நாட்கள் ஆயிற்று" என்று கோஷம் எழுப்பினர்.