மிக்க மகிழ்ச்சி... உடல் நிலை சரியாகி வீடு திரும்பிய வாவா சுரேஷ்... உயிர் பிழைத்ததை நினைத்து உருக்கம்.!

மிக்க மகிழ்ச்சி... உடல் நிலை சரியாகி வீடு திரும்பிய வாவா சுரேஷ்... உயிர் பிழைத்ததை நினைத்து உருக்கம்.!



vava-suresh-discharged-from-hospital

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் வாவா சுரேஷ். பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான சுரேஷ் இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாம்புகளை மிகவும் லாவகமாக பிடித்துள்ளார். அதில் 200க்கும் மேற்பட்ட பாம்புகள் அரிய வகை ராஜநாகம் மற்றும் நல்ல பாம்பு வகையை சேர்ந்தது.

பாம்புகளை மிகவும் லாவகமாக பிடிக்கும் சுரேஷ் அண்மையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சி குடியிருப்பு பகுதியில் நல்ல பாம்பு ஒன்று சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து உடனே அங்கு சென்றுள்ளார்.

நல்ல பாம்பை பிடித்து பைக்குள் போட சென்ற போது எதிர்பாராத விதமாக அந்த பாம்பு சுரேஷின் முழங்காலில் கடித்துள்ளது. பாம்பு கடித்த பின்பும் விடாமல் அந்த பாம்பை பைக்குள் அடைத்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். 

Vava suresh

அதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாவா சுரேஷின் உடல்நிலை மிகவும் மோசமானதாக இருப்பதாக தகவல் வெளியானது. மேலும் வாவா சுரேஷ் நலம் பெற வேண்டி நிறைய பேர் கோவில்களில் பிராத்தனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது வாவா சுரேஷ் உடல் நலம் சரியாகி வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிர் பிழைத்தது பற்றி வாவா சுரேஷ் பகிர்ந்த உருக்கமான பதிவும் வெளியாகியுள்ளது.

அதில் வாவா சுரேஷ், பாம்பு கடித்ததும் நான் இறந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் என் உயிரை காப்பாற்றி விட்டார்கள். எனது உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து வாவா சுரேஷிடம் மருத்துவர்கள் சரியான உபரணங்களுடன் இனி பாதுகாப்பாக பாம்பை பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.