இந்தியா

வெளிநாட்டில் கணவர் இறந்தது கூட தெரியாமல் குழந்தையை பெற்றெடுத்த மனைவி.! மனதை உருகவைக்கும் சோக சம்பவம்..!

Summary:

Valinattil kanavar uirrintha nilaiyil pen kulanthaiyai parradutha manaivi

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் நிதின் -ஆதிரா தம்பதியினர். இவர்கள் இருவரும் துபாயில் வாழ்ந்து வந்த நிலையில் ஆதிரா கர்ப்பமாக இருந்துள்ளார். இந்நிலையில் கர்ப்பமான ஆதிராவை கவனித்து கொள்ள யாரும் இல்லாத காரணத்தால் தனது சொந்த ஊரான கோழிக்கோடுக்கு செல்ல அனுமதி தருமாறு உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதனை அடுத்து உயர்நீதிமன்ற அனுமதியுடன் மே 7 ஆம் தேதி இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் துபாயில் இருந்து வந்த நிதின் திடீரென உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோயால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால் நிதின் இறந்த செய்தியை நிறைமாத கர்ப்பிணியான ஆதிராவிடம் கூறாமல் குடும்பத்தினர் மறைந்துள்ளனர்.

இந்நிலையில் கணவர் இறந்த அடுத்த நாளே ஆதிராவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் உயிரிழந்த நிதினின் உடல் விரைவிலேயே சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. 


Advertisement