18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரெடியா.? கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ள தயாரா.?

18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ரெடியா.? கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்து கொள்ள தயாரா.?



vaccine for above 18

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவிவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இந்தநிலையில், ஏப்ரல் 28 புதன்கிழமை இன்று முதல் 18 வயது நிரம்பிய அனைத்து வயது இந்தியர்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 ஆம் தேதியிலிருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமானவர்கள் தடுப்பூசி மையங்களில் குவிய வாய்ப்புள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட நேரடியாக மருத்துவமனைகளுக்கோ தடுப்பூசி மையங்களுக்கோ செல்வதற்கு பதில் COWIN என்ற அரசின் தளத்தில் அல்லது ஆரோக்ய சேது செயலியில் முன்பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

18 வயதை கடந்தவர்கள் www.CoWin.gov.in/home என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளலாம். இதில் பதிவு செய்து கொள்ள புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்று அவசியம். செல்போன் நம்பரை பயன்படுட்தி பதிவு செய்துகொள்ளலாம். ஒரு செல்போன் நம்பரில் நான்கு பேர் வரை பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொருவருக்கும் தனித் தனி புகைப்பட அடையாள அட்டைகள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.