என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
காதலை ஏற்க மறுத்த சிறுமியை கடத்தி சீரழித்த இளைஞர்; முகத்தில் சூடு வைத்து பெயரை எழுதிய பயங்கரம்.!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி பகுதியை சேர்ந்தவர் அமன் (வயது 17). இவர், அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். சிறுமி அமனின் காதலை ஏற்கவில்லை.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி சிறுமியை கடத்திச்சென்ற அமன், 3 நாட்கள் அவரை தனிமையான இடத்தில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின் இரும்பு கம்பியை சுடவைத்து, சிறுமியின் முகத்தின் தனது பெயரை எழுதி இருக்கிறார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கயவனின் பிடியில் இருந்து தப்பி வந்துவிட, அங்குள்ள காவல் நிலையத்தில் பெற்றோரின் உதவியுடன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அமனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான மருத்துவ ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.