ஐயஹோ.. கள்ளகாதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 ஆவது மாடியில் இருந்து ஜம்ப்.. உடல் சிதறி பலியான கள்ளக்காதலன்..!

ஐயஹோ.. கள்ளகாதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க 5 ஆவது மாடியில் இருந்து ஜம்ப்.. உடல் சிதறி பலியான கள்ளக்காதலன்..!


Uttar Pradesh Affair Couple Live Jaipur Man Jump form 5 th Floor Died Escape Woman Husaband

கள்ளகாதலியின் கணவரிடம் இருந்து தப்பிக்க, வீட்டின் 5 ஆவது தலத்தில் இருந்து கீழே குதித்தனர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். 

உத்திரபிரதேசம் மாநிலத்த்தில் உள்ள நைடான் பகுதியை சார்ந்தவர் மொஹ்சின். இவர் திருமணம் முடிந்து கணவர் மற்றும் மகள் இருக்கும் பெண்ணுடன் கள்ளக்காதல் உறவு வைத்திருந்துள்ளார். கள்ளக்காதல் ஜோடி இருவரும் நாம் சேர்ந்து வாழலாம் என திட்டமிட்ட நிலையில், மொஹ்சின் தனது கள்ளக்காதலி மற்றும் அவரது மகளுடன் கடந்த 2 வருடத்திற்கு முன்னர் வீட்டினை விட்டு வெளியேறி இருக்கிறார். 

மனைவி மற்றொரு நபருடன் கள்ளத்தொடர்பு வைத்து அவருடன் ஓடிவிட்டதை அறிந்த கணவன், மனைவியை கண்டறிந்து அவருடன் சேர்ந்து வாழ திட்டமிட்டு மனைவி மற்றும் அவரின் கள்ளக்காதலனை தேடி வந்துள்ளார். தனது மகளையும் கள்ளக்காதல் ஜோடி அழைத்து சென்றதால், மகளையாவது தன்னுடன் அழைத்து வந்துவிடலாம் என்ற எண்ணத்துடன் தந்தையாக மகளை தேடி பயணிக்க தொடங்கியுள்ளார். 

Uttar pradesh

இவர்கள் எங்கு சென்றார்கள்? என்ற விபரம் எதுவும் இல்லாத நிலையில், இறுதியாக 2 வருடம் கழித்து கள்ளக்காதல் ஜோடி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் இருப்பது உறுதியானது. இதனையடுத்து, மனைவி, மகளை தேடி ஜெய்ப்பூருக்கு பெண்ணின் கணவர் வருகை தந்துள்ளார். இவர்களை பல்வேறு இடங்களில் தேடி அலைந்த நிலையில், சம்பவத்தன்று அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே மனைவி, மகள் செல்வதை கண்டுள்ளார். 

இதனையடுத்து, மனைவி - மகளை பின்தொடர்ந்தவாறே அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்ற நிலையில், இருவரும் வீட்டின் உள்ளே சென்றனர். அவர்கள் சென்ற வீட்டினை பார்த்துக்கொண்டு பெண்ணின் கணவர், தடபுடலாக கதவை திறந்து வீட்டிற்குள் செல்ல, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கள்ளக்காதலன் மொஹ்சின், 5 ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து இருக்கிறார். 

Uttar pradesh

கீழே விழுந்து உயிருக்கு போராடிய மொஹ்சின் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த பிரதாப் நகர் காவல் துறையினர், மொஹ்சினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளையில் உண்மை விபரம் தெரியவந்த நிலையில், பெண் மற்றும் அவரது கணவர், தம்பதியின் மகள் என 3 பேரும் மாயமாகி இருப்பதால், அவர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அவர்களை கைது செய்த பின்னரே, மர்ம மரணத்தின் உண்மை நிலவரம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.