இந்தியா

உணவு சமைத்து கொடுக்க தாமதமானதால் மருமகளின் கழுத்தை நெறித்து கொலை செய்த மாமனார்!

Summary:

Uthirapradash

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள திடவுரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மருமகளிடம் பயங்கரமாக பசிக்கிறது என்று கூறியுள்ளார். உடனே மருமகள் இதோ சமைத்து தருகிறேன் என்று கூறி சமையலறைக்கு சென்றுள்ளார்.சமையலறைக்கு சென்று நீண்ட நேரமாகியும் சமையல் ரெடி ஆகவில்லை.

இதனால் பயங்கரமான கோபத்திற்கு ஆளான மாமனார் சமையலறைக்கு சென்ற மருமகளின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். அதனை அடுத்து இந்நிகழ்வு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வந்து மாமனாரை கைது செய்துள்ளனர். இவர் இதற்கு முன்பு தனது மகனிடம் வரதட்சணை பிரச்சனையின் காரணமாக வேறு ஒரு பெண்ணை மணக்குமாறு கூறி வந்தது தெரியவந்துள்ளது. இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement