இந்தியா

கண் கலங்கவைக்கும் சம்பவம்!! ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் 5 குழந்தைகளுடன் 5 நாட்கள் தவித்த தாய்!!

Summary:

5 குழந்தைகளுடன் 5 நாட்களாக உணவு இல்லாமல் தவித்துவந்த குடும்பத்தின் கதை கேட்போரை சோகத்தில்

5 குழந்தைகளுடன் 5 நாட்களாக உணவு இல்லாமல் தவித்துவந்த குடும்பத்தின் கதை கேட்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனாவால் ஏற்பட்ட நேரடி மரணங்கள் ஒரு சோகம் என்றால், அதையும் தாண்டி பசி என்ற பெரிய சோகத்தை பல இடங்களில் கொரோனா ஏற்படுத்தியுள்ளது. ஆம், ஊரடங்கு காரணமாக பல இடங்களில் பலர் வேலை இல்லாமல், உணவு இல்லாமல் தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்றுதான் இது. உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த குட்டி என்ற பெண் தனது கணவன் கொரோனாவால் கடந்த ஆண்டு உயிரிழந்தநிலையில், தனது 5 பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்துவந்துள்ளார். மூத்த மகன் கட்டிட வேலைக்கு சென்று, அதில் வரும் பணத்தை வைத்துதான் இவர்கள் குடும்பம் நடத்திவந்துள்ளனர்.

தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் குட்டியின் மகனுக்கு வேலை இல்லை. இதனால் வருமானம் இல்லாமல் மொத்த குடும்பமும் பசியில் தவித்துள்ளது. உணவுக்கே வழியில்லாமல் அக்கம்பக்கத்தினரிடம், உறவினரிடம் உணவு பெற்று வந்துள்ளனர். ஒருகட்டத்தில் அவர்களும் இவர்களுக்கு உதவ முன்வராததால் 6 பேரும் 5 நாட்களாக பசியில் தவித்துள்ளனர்.

இந்த தகவல் எப்படியே அந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களுக்கு தெரியவர, அவர்கள் உடனே அந்த 6 பேரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட மாஜிஸ்திரேட் சந்திர பூஷண் சிங் ஒரு குழுவை அமைத்து அந்த குடும்பத்திற்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார்.


Advertisement