அமெரிக்காவில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மெசேஜ்.. ஓடோடிச்சென்று உயிரை நிமிடங்களில் காப்பாற்றிய அதிகாரிகள்.!UP Cop Save Man Life From Suicide 

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட் பகுதியை சேர்ந்த நபர், தனது மனைவியுடன் சண்டையிட்டு இருக்கிறார். இதனால் மனவேதனை அடைந்தவர், அங்குள்ள இரயில் நிலையத்திற்கு வந்து தற்கொலை செய்ய முயற்சித்து இருக்கிறார். மேலும், அதனை நேரலை விடியோவும் பதிவு செய்து இருக்கிறார். 

தற்கொலை நேரலை

முகநூலில் ஒளிபரப்பான நேரலை காட்சிகளின் அடிப்படையில், முகநூல் நிறுவனத்திற்கு தற்கொலை தொடர்பான சமிக்கை சென்றுள்ளது. இதனையடுத்து, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் பதிவு செய்யும் இடத்தின் இருப்பிடத்தை உணர்ந்து, மீரட் காவல் துறையின் சைபர் செல்லுக்கு தகவல் பரிமாறப்பற்றப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ரூ.12 இலட்சம் மதிப்புள்ள ஹோண்டா காரை லம்போகினியாக மாற்றிய யூடியூபர்..!

தக்க சமயத்தில் உயிர்காத்த காவலர்கள்

தகவலை அறிந்த காவல் துறையினர், தற்கொலை எண்ணத்துடன் விதியின் இறுதிப்பிடியை நோக்கி பயணம் செய்தவரை தகுந்த நேரத்தில் மீட்டனர். உடனடியாக அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. இதன்பேரில் அவர் தனது நிலையை உணர்ந்து, இனி தான் தற்கொலை செய்யப்போவதில்லை என கூறி இருக்கிறார். இந்த நிகழ்வு பெறும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது. 

இதையும் படிங்க: ஏசி பெட்டியில் அத்துமீறி நுழைந்து இருவர் கும்பலால் பெண் பலாத்காரம்.!