அரசியல்

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை காலமானார்!

Summary:

Up cm father died

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தந்தை உடல்நலக்குறைவால் காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார்.

இவர் சமீப காலமாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் ஆனந்த் சிங் பிஷ்த் உடல் மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனாலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தநிலையில், நேற்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதனையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.

 இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.44 மணி அளவில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை உத்தரபிரதேச மாநில கூடுதல் தலைமை செயலாளர் அவனிஷ் கே அவஸ்தி தெரிவித்தார்.


Advertisement