20 வயது இளம்பெண்ணுக்கு மொட்டை மாடி அறையில் நேர்ந்த கொடூரம்! துர்நாற்றம் வீசியதால் வெளிவந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்..!!!



up-bhadohi-woman-rescued-locked-house

உத்தரப் பிரதேச மாநிலம் பதோஹியில் பூட்டப்பட்ட வீட்டுக்குள் 20 வயது இளம்பெண் மிகவும் மோசமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். பல மாதங்களாக உணவு, குடிநீர் இன்றி அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. உடலில் பல இடங்களில் எலும்பு மற்றும் சதை அழுகிய நிலையில் இருந்ததாகவும், வீட்டுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மொட்டை மாடியில் மாதக்கணக்கில் அடைப்பு

பதோஹி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த தகரக் கொட்டகையின் கீழ் இளம்பெண் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. வெறும் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்த அவருக்கு முறையாக உணவும் குடிநீரும் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீண்ட காலமாக பராமரிப்பின்றி இருந்ததால், அவரது இடுப்புக்குக் கீழ் உள்ள பகுதிகளில் எலும்புகள் மற்றும் சதைகள் அழுகிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! குழந்தைக்கு பாலூட்டும் போது உறங்கிய தாய்...! மடியிலிருந்து நழுவி ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த 9 மாத குழந்தை! அலாரச் சங்கிலியை இழுக்க விடாமல் தடுத்த பயணிகள்! பகீர் சம்பவம்..!!

மேலும், அவரது கால் நகங்கள் நீண்டு வளர்ந்திருந்ததுடன், உடல் முழுவதும் அழுக்கு படிந்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால் வீட்டைச் சுற்றிலும் துர்நாற்றம் வீசியுள்ளது.

துர்நாற்றம் குறித்து போலீசுக்கு தகவல்

அக்கம் பக்கத்தினர் துர்நாற்றத்தை உணர்ந்ததையடுத்து சந்தேகமடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது மிகவும் மோசமான நிலையில் இருந்த இளம்பெண்ணை மீட்டு, தேவையான மருத்துவ உதவிக்காக அனுப்பி வைத்தனர்.

தந்தை மீது குற்றச்சாட்டு; விசாரணை தீவிரம்

இளம்பெண்ணின் தந்தையே அவரை வீட்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இளம்பெண் எத்தனை மாதங்களாக அந்த நிலையில் இருந்தார், அவருக்கு ஏன் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்படவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார் தலையிட்டு இளம்பெண்ணை மீட்டுள்ள நிலையில், அவரை அடைத்து வைத்ததற்கான காரணம் மற்றும் பின்னணி குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: காதலருடன் செல்ல விரும்பிய மனைவி.. மனதை மாற்றாமல் கணவர் எடுத்த விநோத முடிவு!