இந்தியா

ஸ்காலர்ஷிப்பிற்கு விண்ணப்பிக்க சென்ற 17 வயது சிறுமி.. குளத்தில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Summary:

up-17yr-old-girl-raped-brutally-killed-2nd-horrific-incident

உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்புர் கேரி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி வற்றிய குளத்தில் சடலமாக கண்டெக்கப்பட்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தனது கிராமத்திலிருந்து அருகில் இருந்த மற்றோரு கிராமத்திற்கு ஸ்காலர்ஷிப் ஆப்ளை செய்ய சென்ற 17 வயது சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

அதன்பின் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் உடல் அவர்களது கிராமத்திலிருந்து 200மீ தொலைவில் வற்றிய குளத்தில் சடலமாக கிடந்துள்ளது. இதனை கண்டு சிறுமியின் பெற்றோர்கள் கதறி துடித்துள்ளனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

அதன் முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement