இந்தியா

அட பாவி.. இது ஒரு குத்தமா.. பிஞ்சு உடம்பில் சூடு வைத்த மாமா.. 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவனுக்கு இவ்வளவு கொடுமையா?

Summary:

3 வது படிக்கும் சிறுவனுக்கு அக்காவின் கணவர் அயன் பாக்சில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 வது படிக்கும் சிறுவனுக்கு அக்காவின் கணவர் அயன் பாக்சில் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கொச்சினை சேர்ந்த சிறுவன் ஒருவன் தனது பெற்றோருக்கு உடம்பு சரியில்லாதநிலையில் தனது அக்காவின் வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளான். மேலும் அக்காவிற்கு துணையாக வீட்டில் சிறு சிறு வேலைகளையும் பார்த்துவந்துள்ளான் சிறுவன்.

இந்நிலையில் சிறுவனின் அக்கா கணவர் பிரின்ஸ் என்பவர் சிறுவனிடம் காசு கொடுத்து, அருகில் உள்ள கடை ஒன்றுக்கு சென்று பொருட்கள் வாங்கிவருமாறு அனுப்பியுள்ளார். கடைக்கு சென்ற சிறுவன், கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பொருட்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு திரும்ப சற்று தாமதமாகியுள்ளது.

இந்நிலையில் வீட்டிற்கு வந்த சிறுவனை அழைத்து, அருகில் உள்ள கடைக்கு சென்றுவர இவ்வளவு நேரமா என கண்டித்து சிறுவனின் அக்கா கணவர் பிரின்ஸ் சிறுவனுக்கு அயன் பாக்சினால் சூடு வைத்துள்ளார். பிஞ்சு உடம்பில் அந்த சூட்டை தாங்க முடியால் சிறுவன் கதறி அழுதுள்ளான். இதனை அடுத்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் இந்த சம்பவம் குறித்து அந்த பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவனின் மாமா பிரின்ஸை கைது செய்து விசாரித்துவருகின்றனர். மேலும், சிறுவனுக்கு இதுபோல் சூடுவைப்பது இது முதல் முறை அல்ல என்பதும், பிரின்ஸ் அடிக்கடி குடித்துவிட்டு சிறுவனை அடித்து துன்புறுத்துவது, சூடு வைப்பது வழக்கம் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அக்காவின் கணவரே சிறுவனுக்கு சூடு வைத்த சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement