இந்தியா

அனுமதியின்றி மசூதியில் போராட்டம் நடத்திய விவகாரம்: இருவர் கைது, மற்றவர்களுக்கு வலை வீச்சு..! டெல்லி போலீஸ் அதிரடி..!.

Summary:

அனுமதியின்றி மசூதியில் போராட்டம் நடத்திய விவகாரம்: இருவர் கைது, மற்றவர்களுக்கு வலை வீச்சு..! டெல்லி போலீஸ் அதிரடி..!.

டெல்லி ஜூம்மா மசூதிக்கு வெளியே போராட்டம் நடத்திய விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இஸ்லாமிய இறை தூதர் நபிகள் நாயகம் பற்றி பாரதிய ஜனதா கட்சி செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா நவீன்குமார் ஜிநண்டால், இவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் கைது செய்யக்கோரி நேற்று நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம் செய்தனர். டெல்லியில் ஜூம்மா மசூதியில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை முடிந்தவுடன் வெளியே வந்தவர்கள் நுபுர் சர்மாவுக்கும் டெல்லி காவல்துறைக்கும், எதிராக கோஷமிட்டனர். அமைதியாக நடந்த இந்த போராட்டம் அரை மணி நேரத்தில் முடிந்தது இருந்தாலும் இந்த போராட்டம் காவல்துறையினரின் அனுமதியின்றி நடத்தப்பட்டது.

எனவே மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க இந்தப் போராட்டம் காரணமாக இருந்ததாக கூறி அனுமதியின்றி போராட்டம் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.மேலும் குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி மற்றும் செல்போன் காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஜூம்மா மஸ்ஜித் பகுதியிலுள்ள முகமது நதீம்(43). துர்க்மேன் கேட் பகுதியில் உள்ள ஃபஹீம் (37), இருவரையும் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இது குறித்து காவல்துறையினர்  கூறும்போது போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை நாங்கள் ஸ்கேன் செய்து கொண்டு இருக்கின்றோம்.

மேலும் அதிகமான குற்றவாளிகளை தெரிந்துகொள்ள பொதுமக்களால் செல்போனில் எடுத்த காட்சிகளையும் ஆய்வு செய்கின்றோம் இதனால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறையினர் கூறினர்.


Advertisement