புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கள்ளக்காதலுக்கு இடையூறு... துடி துடிக்க கொல்லப்பட்ட பச்சிளம் குழந்தைகள்.!!
கர்நாடக மாநில தலைநகரான பெங்களூருவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உல்லாசத்திற்கு தடையாக இருந்த 2 பச்சிளம் குழந்தைகளை தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூர் நகரை சேர்ந்த ஸ்வீட்டி என்ற பெண்ணிற்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருந்தன. அந்தப் பெண்ணின் மூத்த மகளான கபிலாவிற்கு 2 வயதும் இளைய மகனான கபிலனுக்கு 11 மாதங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் ஸ்வீட்டிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 27 வயதான கிரகோரி பிரான்சிஸ் என்ற இளைஞருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.
கள்ளக்காதலனுடன் தனி குடித்தனம்
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்ததை தொடர்ந்து ஸ்வீட்டி மற்றும் பிரான்சிஸ் இருவரும் ராம் நகரில் உள்ள வீட்டிற்கு குழந்தைகளுடன் குடித்தனம் சென்றனர். தனியாக சென்ற கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்திருக்கின்றனர். இந்நிலையில் பச்சிளம் குழந்தைகள் இருவரும் கள்ளக்காதல் ஜோடிக்கு இடையூறாக இருந்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி.!! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை.!!
கொலை செய்து விட்டு நாடகம்
இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு தனது மகள் கபிலா உடல் நல குறைபாட்டால் மரணமடைந்ததாக கூறி அப்பகுதியில் உள்ள மயானத்தில் ஸ்வீட்டி மற்றும் அவரது காதலன் தகனம் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 11 மாத குழந்தையான கபிலனும் இறந்து விட்டதாக கூறி மயானத்தில் எரித்துள்ளனர். இதனைக் கண்டு சந்தேகம் அடைந்த காவலாளி அவர்கள் குழந்தையை எரிக்கும் காட்சியை வீடியோவாக பதிவு செய்து போலீசாருக்கு அனுப்பி இருக்கிறார்.
சிக்கிய கள்ளக்காதல் ஜோடி
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஸ்வீட்டி மற்றும் பிரான்சிஸ் ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் தங்களது உல்லாசத்திற்கு இடையூறாக இருந்ததால் 2 குழந்தைகளையும் கொலை செய்து மயானத்தில் எரித்ததை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 2 பச்சிளம் குழந்தைகள் கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: கடவுள் இருக்கான் குமாரு.. இடித்து விழுந்த 160 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. நொடியில் உயிர் தப்பிய சிறார்கள்.!