புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கொடூரத்தின் உச்சம்... பலாத்காரம் செய்யப்பட்ட 8 வயது சிறுமி.!! ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை.!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு அரை நிர்வாணமாக செங்கல் சூளை அருகே வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி தனது சகோதரியுடன் வெளியே விளையாட சென்று இருக்கிறார். அப்போது மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்த செங்கல் சூளை அருகே சிறுமியை வீசிவிட்டு அந்த நபர் தப்பிச் சென்று இருக்கிறார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் அரை நிர்வாணமாக மீட்கப்பட்ட சிறுமி
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை அருகே சிறுமி ஒருவர் அரை நிர்வாண நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கடவுள் இருக்கான் குமாரு.. இடித்து விழுந்த 160 ஆண்டுகள் பழமையான கட்டிடம்.. நொடியில் உயிர் தப்பிய சிறார்கள்.!
காவல்துறை தேடுதல் வேட்டை
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை குற்றவாளியை தேடி வருகிறது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அரை நிர்வாணமாக வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: #BigBreaking: நாடே அதிர்ச்சி.. தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் சுட்டுக்கொலை.. மஹாராஷ்டிராவில் பதற்றம்.!