திடீரென நின்றுபோன இதயம்! இளைஞனின் உயிரை காப்பாற்ற துடித்த இருஇதயங்கள்! 6 நாட்களுக்கு பிறகு நேர்ந்த ஆச்சர்யம்!

திடீரென நின்றுபோன இதயம்! இளைஞனின் உயிரை காப்பாற்ற துடித்த இருஇதயங்கள்! 6 நாட்களுக்கு பிறகு நேர்ந்த ஆச்சர்யம்!



two-hearts-beats-together-to-survive-one-soul

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வசித்து வந்தவர் கல்பேஷ். 23 வயது நிறைந்த இவருக்கு கடந்த 2017ம் ஆண்டிலிருந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும் அவர் பெருமளவில் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டநிலையில் அவரது இதயம் சரிவர செயல்படாதது தெரியவந்தது.

இந்நிலையில் அந்த இளைஞருக்கு உடனடியாக இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு கல்பேஷ் குடும்பத்தினரிடம் போதிய வசதி இல்லை. இந்நிலையிலேயே அவர்களுக்கு தாவல் நாயக் என்ற இதயசிகிச்சை நிபுணரின் பழக்கம் கிடைத்துள்ளது. பின்னர் அவரது உதவியோடு  டொனேட் லைஃப் என்ற தொண்டு நிறுவனம் மூலம் கல்பேஷ்க்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

Heart

இந்நிலையில் சூரத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் கல்பேஷுக்கு பொருத்தப்பட்டது. ஆனால் பொருத்தப்பட்ட புதிய இதயம் உடனடியாக செயல்படவில்லை. இதனால் மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக கல்பேஷுக்கு செயற்கை இதயம் பொருத்தி தீவிர சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து 6 நாட்களுக்கு பிறகு தீவிர சிகிச்சையால் புதிய இதயம் செயல்பட துவங்கியது. பின்னர் மருத்துவர்கள் செயற்கை இதயத்தை அகற்றியுள்ளனர். இந்த நிலையில்  கல்பேஷ் அவரது பிறந்தநாளை ஐசியுவில் கொண்டாடியுள்ளார். அப்பொழுது இதனை விட கல்பேஷ்க்கு பெரிய பரிசு  கிடைக்க முடியாது என மருத்துவர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்..