இந்தியா வீடியோ

உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்! தீவிரமாகும் கொரோனா! நடிகை திரிஷா வெளியிட்ட வீடியோ!

Summary:

Trisha post coronovirus awarness video

சீனாவில் வுஹான்  நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 170 க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. உலகெங்கும் கொரோனோவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 10000க்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உலக நாடுகளே பெரும் பீதியில் உள்ளது.

மேலும் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. தற்போது 271 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் பிரபல நடிகையும், யுனிசெப் நிறுவனத்தின் இந்தியாவுக்கான நல்லெண்ணத் தூதராக இருக்கும் த்ரிஷா கொரோனா வைரஸிலிருந்து  எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  இருமல் மற்றும் தும்மல் வந்தால் என்ன செய்ய வேண்டும், கைகளை எவ்வாறு தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும், மற்றும் உடல்நிலை சரியில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார்.
இந்த வீடியோவை யுனிசெப் இந்தியா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


Advertisement