#வீடியோ: 80 ஆண்டு பழமையான மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டாமல் கட்டப்பட்ட 4 மாடி வீடு! வைரலாகும் வீட்டின் வீடியோ..

#வீடியோ: 80 ஆண்டு பழமையான மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டாமல் கட்டப்பட்ட 4 மாடி வீடு! வைரலாகும் வீட்டின் வீடியோ..


tree-house

80 வருடங்கள் பழமையான மாமரத்தை வெட்டாமல் அதன் மேல் கட்டியுள்ள 4 மாடி வீட்டின் வீடியோ ஒன்று இணையதளத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

உதய்பூரில் உள்ள குல் பிரதீப் சிங் என்ற ஐஐடி பொறியாளர் ஒருவர் நான்கு மாடி வீடு ஒற்றை கட்டியுள்ளார். அந்த வீடானது 80 வருடங்கள் பழமையான மாமரத்தை வெட்டாமல் அதன் மேல் கட்டியுள்ள அழகான  வீடாகும்.

அதுவும் இது நான்கு மாடிகளில் கட்டப்பட்ட மாமர வீடு. உதய்பூரில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுற்றுச்சூழல் வீடு உலகப் பிரபலமானது. இந்த வீடு 'ட்ரீ ஹவுஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த வீட்டில் அனைத்து வசதிகளும் உள்ளன. இந்த வீட்டைக் கட்டுவதற்காக, சுற்றுச்சூழல் ஆர்வலர் குல் பிரதீப் சிங், மரத்தின் ஒரு கிளையைக் கூட வெட்டவில்லை. தற்போது இந்த குறிப்பிட்ட வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...