ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
சேலத்தில் பயங்கரம்... "இரவில் வந்த காதலன்..." சடலமாக மீட்கப்பட்ட திருநங்கை.!!
சேலம் மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக திருநங்கை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தலைமறைவாக இருக்கும் அந்த நபரின் காதலனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் பொன்னம்மாபேட்டை வடக்கு ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். 21 வயதான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறி தனது பெயரை வனிதா என மாற்றிக் கொண்டார். மேலும் இவர் தனது குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து வடக்கு ரயில்வே காலனி பகுதியில் தனியாக வீடெடுத்து தங்கியிருந்து அப்பகுதியிலுள்ள பூக்கடை மற்றும் செல்போன் கடைகளில் வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த நவீன்(25) என்ற இளைஞருடன் காதல் ஏற்பட்டிருக்கிறது. வனிதாவை சந்திப்பதற்காக நவீன் அடிக்கடி இரவு நேரங்களில் அவரது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு வனிதா தனது அக்கா மரகதத்தை பார்த்துவிட்டு வீடு திரும்பியிருக்கிறார். அதன் பிறகு நவின், வனிதாவை பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை வனிதாவை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு வந்திருக்கிறார் மரகதம். அப்போது தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார் வனிதா. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மரகதம் மற்றும் அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் வனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியது.
இதையும் படிங்க: கள்ள உறவுக்காக நண்பன் கொலை.!! மனைவி, கள்ளக்காதலன் கைது.!!
மேலும் இது தொடர்பாக காவல்துறை நடத்திய முதல் கட்ட விசாரணையில், வனிதா இரும்பு கம்பியால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் அவரது காதலன் நவீன் ஈடுபட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. திருநங்கை இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: "குடி குடியை கெடுக்கும்.." போதையால் சீரழிந்த குடும்பம்.!! புதுமண தம்பதி தற்கொலை.!!