ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு உற்சாக செய்தி! ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் எதிர்ப்பு

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு உற்சாக செய்தி! ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் எதிர்ப்பு


trai-planned-to-cut-iuc-rates-from-january

தொலைதொடர்பில் ஒரு நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இருந்து வேறுஒரு நெட்வொர்க்கிற்கு கால் செய்யும் போது அழைப்பை ஏற்கும் நெட்வொர்க் நிறுவனத்திற்கு ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் அழைப்பை செலுத்தும் நிறுவனம் கட்டணம் செலுத்த வேண்டும். டிராய் நிறுவனத்தின் இந்த விதிமுறைக்கு இணைப்பு கட்டணம்(ஐயுசி) என்று பெயர்.

ஜியோ ஆரம்பகாலத்தில் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழக்கியபோதும் கூட இந்த இணைப்பு கட்டணத்தை தனது சொந்த பணத்தில் இருந்து ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களுக்கு செலுத்தியுள்ளது. அந்த தொகை மட்டும் ஏறக்குறைய 13500 கோடி என கணிக்கப்படுகிறது.

ஆனால் மற்ற நிறுவங்களில் இருந்து ஜியோ நிறுவனத்திற்கு இந்த தொகை பெருமளவில் கிடைப்பதில்லை. காரணம் மற்ற நெட்வொர்க்கில் இருப்பவர்கள் வெறும் மிஸ்டு கால் கொடுப்பதால் தான். இந்த இழப்பை சரி செய்யும் பொருட்டு தான் ஜியோ நிறுவனம் தற்போது மற்ற நெட்வொர்க் எண்களுக்கு பேசுவதற்காக தனியாக கட்டணம் வசூல் செய்கிறது.

Jio

இந்நிலையில் இந்த கட்டண முறை வாடிக்கையாளர்களுக்கு சுமையாக இருப்பதால் இந்த இணைப்பு கட்டணத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ரத்து செய்வதாக டிராய் நிறுவனம் அறிவித்தது. ஆனால் இதற்கு ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த கட்டணத்தை மேலும் சில காலம் நீடிப்பதாக முடிவு செய்தது டிராய்.

இதனால் மிகுந்த கோபமடைந்த ஜியோ நிறுவனம், டிராய் நிறுவனத்திற்கு கடிதம் எழுதி எந்த காரணத்தை கொண்டும் இந்த கட்டணத்தை பெரும் காலத்தை நீடிக்க கூடாது என வலியுறுத்தியது. இதனிடையே தற்போது டிராய் நிறுவனம் ஒரு கூட்டத்தை நடத்தியது. முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனகளான ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா என மொத்தம் 155 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

Jio

இந்த கூட்டத்தின் முடிவில் இணைப்பு கட்டணத்தை ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்து வரும் ஜனவரி மாதம் முதல் ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஜியோ தற்போது வசூலிக்கும் கூடுதல் கட்டணத்தை முற்றிலும் நிறுத்தி விடும். ஆனால் இந்த முடிவால் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் மிகுந்த எரிச்சலில் உள்ளன.