கோவில் திருவிழாவில் டிராக்டரால் வீலிங் செய்து விளாசிய ஆண்கள்..! கட்டுப்பாட்டை இழந்து சுழன்றதால் விபரீதம்..! 10 பேர் படுகாயம்..!



tractor wheeling accident in karnataka

கோவில் திருவிழாவின் போது ஆபத்தான முறையில் சிலர் டிராக்டர்களில் வீலிங் செய்ததால், 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள சமக்கரி கிராமம், பிரம்மலிங்கேஸ்வரர் கோவில் திருவிழாவை காண்பதற்காக ஏராளமான மக்கள் பலரும் அங்கு திரண்டு வந்துள்ளனர். அப்போது அங்கு சாலையில் டிராக்டரின் முன் சக்கரங்களை தூக்கியவாறு, பின் சக்கரங்களால் டிராக்டரை இயக்கி சிலர் சாகசம் செய்தனர்.

karnataka

அப்படி வீலிங் செய்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சுழன்றதில், அருகிலிருந்த 10 பேர் பலத்த காயமடைந்தனர். இதனால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டிராக்டர்களில் வீலிங் சாகசம் செய்தது குறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.