இந்தியாவில் 500க்கும் கீழ் குறைந்த கொரோனா உயிரிழப்பு..

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 500க்கு கீழ் குறைந்துள்ளது.


Today's corona updates

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்ததை அடுத்து மக்களை முன்னெச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் படிபடியாக குறைந்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனா உயிரிழப்பு 1000க்கும் மேல் இருந்த நிலையில் தற்போது 500க்கும் கீழாக குறைந்து வருகிறது. அதேபோல் பாதிப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

India

இந்தியாவில் 3 மாதங்களுக்கு பின் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 500க்கும் கீழ் குறைந்து வருவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இனி வரும் நாட்களிலும் கொரோனாவின் தாக்கம் இன்னும் படிபடியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.