இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்...Today petrol diesel update

இந்தியாவில் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றம் செய்யப்பட்டு வந்த நிலையில் , கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தினந்தோறும் பெட்ரோல் , டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை அமலுக்கு வந்த பிறகு நாள்தோறும் 15 காசுகள், 20காசுகள் என பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. 

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி பெட்ரோல் மீதான கலால் வரி 5 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியில் 10 ரூபாயும் குறைப்பதாக அறிவித்ததால் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. ஆனாலும், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அவ்வப்போது அதிகரித்து வருகிறது.

petrol

இந்நிலையில், 33-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலை நீடித்து வருகிறது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.40 ரூபாய்க்கும், டீசல் 91.43 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.