நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
நின்று கொண்டிருந்த கண்டைனர் லாரி மீது மோதி விபத்து.. 2 பேர் பரிதாப பலி.. உறக்கத்தில் நடந்த சோகம்..! !

கொச்சிக்கு சென்றவர்கள் திரும்பி வருகையில் ஏற்பட்ட விபத்தில், திருப்பூரை சேர்ந்தவர்கள் 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூத்தம்பாளையம், அண்ணா நகரில் வசித்து வருபவர்கள் பாலாஜி (வயது 47), முருகேசன் (வயது 49). இவர்கள் இருவரும் திருப்பூரில் செயல்பட்டு வரும் பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னதாக வெளிநாட்டில் இருந்து முதலீட்டாளர்கள் பாலாஜியின் நிறுவனத்திற்கு வந்துள்ளார்கள்.
நேற்று நள்ளிரவு நேரத்தில் முதலீட்டாளர்களை வழியனுப்ப கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி விமான நிலையத்திற்கு பாலாஜி, முருகேசன், நண்பர்கள் பதுருதீன் மற்றும் மெய்னுதீன் ஆகியோர் சென்றுள்ளனர். பின்னர், கொச்சியில் இருந்து நால்வரும் திருப்பூர் நோக்கி பயணம் செய்துள்ளனர். இவர்களின் கார் வாலையாறு ஆர்.டி.ஓ சோதனை சாவடியை கடந்துள்ளது.
அப்போது, சாலையோரத்தில் நின்றுகொண்டு இருந்த கண்டைனரின் மீது கார் அதிவேகத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், பாலாஜி மற்றும் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பதுருதீன் மற்றும் மெய்னுதீன் ஆகியோரை பொதுமக்கள் மீட்டு பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் இருவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உறக்க கலக்கத்தில் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.