என்னது.! பட்டாசுகளை இந்த நேரத்தில் தான் வெடிக்கனுமா.! - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

என்னது.! பட்டாசுகளை இந்த நேரத்தில் தான் வெடிக்கனுமா.! - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு



Time to burst crackers from Supreme Court

காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடுகளை காரணமாக முன்னிறுத்தி இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஏகே சிக்ரி தலைமையிலான குழு சில நிபந்தனைகளுடன் பட்டாசு விற்பனையை மேற்கொள்ளலாம் என தீர்ப்பளித்துள்ளது.

நிபந்தனைகளில் சில:

1. சக்தி வாய்ந்த பட்டாசுகளை சரியான உரிமம் பெற்றவர்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். 

2. அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் பட்டாசு விற்பனை செய்ய கூடாது. 

3. அளவான வேதிப்பெருட்களுடன் குறைவான சத்தம் வரக்கூடிய பட்டாசுகளை மட்டும் தயாரிக்க வேண்டும். 

4. தீபாவளி உள்ளிட்ட பெரிய விழாக்களின் போது இரவு 8 மணி முதல்  இரவு 10 மணி வரை தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். 

5. கிறிஸ்துமஸ், புத்தாண்டு நாட்களில் மட்டும் நள்ளிரவு 11:45 முதல் 12:45 வரை பட்டாசு வெடிக்கலாம்.