நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
அரசு பள்ளியில் குழந்தைகள் குடிக்கும் குடிநீர் தொட்டியில் மனித கழிவு! திருவாரூரில் பரபரப்பு....
திருவாரூர் மாவட்டத்தில் காரியாங்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடந்த ஒரு அதிர்ச்சிக்கான சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெம்மேலி, இலங்கைச்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயிலும் இப்பள்ளியில், அரசு வழங்கும் காலை உணவுத் திட்டம் தினசரி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை, சமையலறைக்கு வந்த ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். சமையலறை கதவு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த மளிகைப் பொருட்கள் சிதறடிக்கப்பட்டு காணப்பட்டன. அதைவிடக் கடுமையானது, மாணவர்கள் குடிநீர் அருந்தும் பிளாஸ்டிக் தொட்டியில் மனித கழிவு கொட்டப்பட்டிருந்தது. மேலும் பள்ளியின் வாழைமரங்கள் சேதப்படுத்தப்பட்டு, தென்னை மரங்களில் இருந்த தேங்காய்கள் பறிக்கப்பட்டிருந்தன.
அதேபோல், சிலர் பள்ளி வளாகத்தில் சிக்கன் சமைத்து உண்ணியதற்கான ஆதாரங்கள் இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர். உடனடியாக பள்ளி தலைமை ஆசிரியர் தகவல் அளித்ததால், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். குடிநீரில் மலம் கலந்ததற்கான தகவல் பரவியதும், கிராம மக்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளிக்கு முன்பு திரண்டு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஆசையாக சிக்கன் வாங்கிட்டு வந்த கணவன்! சாப்பிட அடம்பிடித்த மனைவி! கோபத்தில் புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு!
இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூன்று குடிபோதையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது சாதி அடிப்படையிலான தாக்குதல் அல்ல என்றும், குடிபோதையில் செய்த செயல் என போலீசார் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இந்த சம்பவத்தை கண்டித்து, குற்றவாளிகளுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊஞ்சலில் விளையாடிய குழந்தை ! மாலை வீடு திரும்பிய மகள் பார்த்த அதிர்ச்சி! பதறவைக்கும் சம்பவம்..