இந்தியா

வெளிநாட்டு மதுபானத்திற்கு ஆசைப்பட்டு வசமாக சிக்கிய திருடன்!

Summary:

Thief

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் திருட சென்ற நபர் அங்கேயே தூங்கியதால் மறுநாள் காலை போலீசில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த நபர் ஒருவர் அதே குடியிருப்பில் வேறு ஒரு வீட்டையும் விலைக்கு வாங்கியுள்ளார். விலைக்கு வாங்கிய வீட்டில் ஒரு சில பொருட்களை வைத்து விட்டு தனது பழைய வீட்டிலேயே தங்கியுள்ளார்.

ஒரு நாள் காலை எழுந்ததும் தனது புதிய வீட்டில் லைட் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே வீட்டை திறந்து உள்ளே சென்ற போது அங்கு ஒரு நபர் நன்கு குறட்டை விட்டு தூங்கி கொண்டிருந்துள்ளார்.

அதனை அடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வந்து விசாரணை செய்ததில் அந்த நபர் வீட்டிற்கு திருட வந்த போது வீட்டில் இருந்த வெளிநாட்டு சரக்கை பார்த்ததும் அதனை குடித்து விட்டு மட்டையானது தெரியவந்துள்ளது. 


Advertisement