இந்தியா

உயிர் போனால் மீட்க முடியாது! ஊரடங்கை நீட்டியுங்கள்! தெலங்கானா முதல்வர் அதிரடி!

Summary:

thelungana-cm-talk-about-144

உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியதால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார் பாரத பிரதமர்.

தெலங்கானாவில் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டித்தால் நல்லது என்ற பிசிஜி அறிக்கையை மட்டுமே அவர் குறிப்பிட்டார்.

தெலுங்கானா முதல்வர் பேசுகையில், போதிய மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாத நம் நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது கடினம். எனவே ஊரடங்கை நீட்டிப்பதே நல்ல முடிவாக இருக்கும் என்றும் சந்திரசேகர் ராவ் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஊரடங்கால் பொருளாதார பாதிப்பு மட்டுமே ஏற்படும். அதிலிருந்து மீண்டு விடலாம் ஆனால் உயிர்கள் போனால் மீட்க முடியுமா என்றும் தெலங்கானா முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement