உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயிலில் கொள்ளை! மருத்துவமனையில் பதறிய பயணி! போலீசாரின் அதிரடி!

உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ரயிலில் கொள்ளை! மருத்துவமனையில் பதறிய பயணி! போலீசாரின் அதிரடி!



theft-in-train


அமீத்குமார், என்பவர் மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து, ஜூலை, 18ம் தேதி, ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார். ரயில் சென்னை வந்தபோது, படுக்கையில் மயங்கி கிடந்தவரை, சென்ட்ரல் ரயில்வே போலீசார் மீட்டு, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மயக்கத்திலிருந்து எழுந்தபின் நான் எங்கிருக்கிறேன் என அமித்குமார் கேட்டுள்ளார். ஹவுரா ரயில் பெட்டியில் நீங்கள் மயங்கிக் கிடந்ததை பார்த்ததும் மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறினர் போலீசார். 

இதனையடுத்து தான் அணிந்திருந்த நகை மற்றும் வைத்திருந்த பணத்தை காணவில்லை என அமித்குமார் தெரிவித்தார். அப்போதுதான் இது மயக்க மருந்து கொடுத்து கொள்ளையடிப்பவரின் கைவரிசை என்பதை காவல்துறை தெரிந்து கொண்டனர்.

அப்போதுதான் ரயிலில் சக பயணியை போல வந்தவர், நன்றாக பேசி, உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, நகைகள், மொபைல் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து  விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். டிக்கெட் கவுன்ட்டரில் பயணச்சீட்டு வாங்கிய ஒருவரின் நடவடிக்கைகைள் காவல்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. 

railway

இதனையடுத்து போலீசார் அமித்குமாரிடம் அந்த நபரை காட்டிய போது அவர்தான் தன் அருகில் அமர்ந்திருந்தவர் என அடையாளம் காட்டியுள்ளார். இவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர் பெயர்  சுபாங்கர் சக்ரபோர்தி என்றும், இவர் தான் அமீத்குமாரிடம் திருடியது என்பதும் தெரியவந்தது.

ரயில் பயணத்தின்போது, சக பயணியரிடம் நன்றாக பேசி, அவர்களுக்கு தெரியாமல், உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பின் அவர்களின் உடைமைகளை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்  சுபாங்கர் சக்ரபோர்தி.

இவர் மீது, தமிழகம், கான்பூர், ஹவுரா, விஜயவாடா ரயில்வே காவல் நிலையங்களில், பல வழக்குகள் உள்ளன. மேலும் அவரிடமிருந்த மயக்க மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.