
பெற்றோர் சம்மதத்துடன் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்.! தேனிலவு எங்கே தெரியுமா.?
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிந்து என்ற 24 வயதான இளம்பெண், வரும் ஜூன் 11ஆம் தேதி தனக்கு நடைபெறவிருக்கிற வினோதமான திருமணத்திற்கு தயாராகி வருகிறார். ஆனால் பிந்து தனது பெற்றோர் சம்மதத்துடன் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.
இதுகுறித்து மணமகள் பிந்து கூறுகையில், "நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகளாக விரும்புகிறேன். அதனால்தான் என்னை நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறேன். இந்தியாவில் வேறு எந்தப் பெண்ணும் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டாரா என்பதை இணையத்தில் தேடிப்பார்த்தேன். ஆனால் அப்படி யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
சுய திருமணம் என்பது தனக்காக நிபந்தனையற்ற அன்பு. இது சுயமாக ஏற்றுக்கொள்ளும் செயலும் கூட. மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன், அதனால் என்னையே நான் திருமணம் செய்து கொள்கிறேன். திருமணம் முடிந்ததும் தேனிலவு கொண்டாட கோவா செல்லவிருப்பதாகவும் பிந்து கூறியுள்ளார்.
Advertisement
Advertisement