"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
சந்தேகப்பட்ட கணவனை செங்கல்லால் அடித்து கொலை செய்த மனைவி..!!
உத்தரபிரதேசத்தில் உள்ள பரேலி மாவட்டம் நவடா நதுவா கிராமத்தில் வசிப்பவர் பப்பு (25). கூலி தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், பப்புவுக்கு தனது மனைவி வெறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் என சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு அவரது மனைவி மறுத்துள்ளார். இருந்த போதிலும் பப்பு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தொடர்ந்து சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு பப்பு தனது மனைவியிடம் சந்தேகத்தில் தகராறு செய்துள்ளார்.
அப்போது, இருவருக்குள்ளும் நடந்த தகராறில் தன்னுடைய நடத்தையில் சந்தேகப்பட்ட கணவரை ஆத்திரத்தில் அவரது மனைவி செங்கல்லால் தாக்கியுள்ளார்.
இதில் பப்பு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். படுகாயமடைந்த பப்புவை அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு பப்புவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.