மது குடிக்க பணம் தர மறுத்த தாய்.! கொடூரமாக தாக்கிய மகன்... பத பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்.!



the-son-brutally-assaulted-his-mother-because-she-regre

தெலுங்கானா மாநிலத்தில் குடிக்க பணம் தராத தாயை மகன் நடு ரோட்டில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார். இதனால் தினமும் மது குடித்துவிட்டு வந்து அவரது தாயுடன் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார். மகன் வேலைக்கு செல்லாமல் மதுவிற்கு அடிமையாக இருந்ததால் அவரது தாய் பத்மம்மா அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வருகிறார்.

Indiaஇந்நிலையில் இன்று காலை தனது தாய் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சென்று சந்தோஷ் அவரிடம் மது குடிப்பதற்காக பணம் கேட்டிருக்கிறார். தாய் பணம் தர மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த அவர் நடு ரோட்டில் வைத்து தனது தாயை சரா மாறியாக தாக்கி இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சந்தோஷை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.