காதலனை நிர்வாணமாக்கி நடுரோட்டில் விட்டு சென்ற காதலி... அதிர்ச்சி சம்பவம்...!!



The girlfriend left her boyfriend naked in the middle of the road...

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் உள்ள ஷஹாபூர் பகுதியில் வசித்து வருபவர் பாலாஜி ஷிவ்பகத். இவர் கட்டுமான தொழில் செய்து வந்தார். பாலாஜி பவிகா போயர் என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 28 ஆம் தேதி காதலியை சந்தித்துள்ளார். இருவரும் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென மர்ம நபர்கள் ஐந்து பேர், அங்கு வந்துள்ளனர்.

அதன் பின்னர், அந்த ஐந்து பேருடன் சேர்ந்து, தனது காதலனை பவிகா காரில் கடத்தி சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, ஒரு நாள் முழுவதும் காதலனை அடித்து கொடுமைப்படுத்திய பவிகா, அவரிடம் இருந்த பணத்தையும் பறித்துள்ளார். பின்னர் பாலாஜியை நிர்வாணமாக்கிவிட்டு, அவரை நடுரோட்டில், இறக்கவிட்டுள்ளனர்.

காயங்களுடன் தட்டுத்தடுமாறி, அங்கிருந்து நடந்து வந்த பாலாஜி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.