அடப்பாவி... 100 பெண்களை ஏமாற்றிய போலி டைரக்டர்... பாலிவுட்டில் நடந்த அதிர்ச்சி.!



the-fake-director-who-cheated-100-women-the-shock-in-bo

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி 100க்கும் மேற்பட்ட பெண்களை  ஏமாற்றிய சம்பவம்  பாலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது  இது தொடர்பாக சுனில் குமார் வருமா என்பவரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஹரியானா மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்தவர் சன்னி குமார் வர்மா(33)  இவர் தன்னை பாலிவுட் சினிமாவில் காஸ்டிங் டைரக்டர் என கூறிக்கொண்டு சமூக வலைதளங்களின் மூலமாக 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் பயோடேட்டாக்களை வாங்கி இருக்கிறார்.

Indiaபின்னர் அவர்களில் சிலரை தேர்வு செய்து எலன் 2  என்ற திரைப்படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதற்கான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளையும் அந்த பெண்களிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இவர் கூறியபடி எந்த சினிமா வாய்ப்பையும் அந்த பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது நாளடைவில் தெரிந்து இருக்கிறது.

Indiaஇது தொடர்பாக அதிர்ச்சி அடைந்த அந்த பெண்கள் காவல்துறையிடம் இவரை பற்றி புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறை சன்னி குமார் வர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.