சமையல் பாத்திரத்திற்குள் தவறி விழுந்து அரசியல்கட்சி பிரமுகர் பலி; செயல்வீரர்கள் கூட்டத்தில் சோகம்.!



Telangana man Died fallen Cooking Vessel 

 

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த மே 2 ம் தேதி பி.ஆர்.எஸ் கட்சியின் செயல்வீரர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்திற்கு அங்குள்ள குக்கிந்தி கிராமத்தில் இருந்து, மலேசம் என்பவர் வருகை வந்திருந்தார். 

இந்நிலையில், சமையல் கூடத்தில் நடக்கும் பணிகளை நேரில் சென்று பார்த்த நபர், திடீரென சமையல் பாத்திரத்தில் விழுந்தார். 

சமையல் பாத்திரத்தில் விழுந்த பரிதாப பலி:

சூடான உணவு யிருந்த பாத்திரத்திற்குள் விழுந்து காயமடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.